'மாணவர்களின் கனவுகளுக்குச் சிறகு அளிப்பவர்கள்'...! - ஆசிரியர்களுக்குத் தமிழக முதல்வர் விஜய் நெகிழ்ச்சி வாழ்த்து...!
Those who give wings dreams students Tamil Nadu Chief Minister Vijay congratulates teachers
முன்னாள் ஜனாதிபதியும், சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்த சிறப்புமிக்க நாளில், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் கல்வி அறிவை மட்டும் வழங்காமல், ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், சமூக அக்கறை, பொறுப்புணர்வு போன்ற உயர்ந்த பண்புகளையும் விதைத்து, அவர்களின் கனவுகளுக்கு சிறகுகள் அளித்து, திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுக்கும் வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர்.
வகுப்பறையில் தொடங்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புப் பணி, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதோடு மட்டுமின்றி, அறிவார்ந்த தலைமுறையையும் பொறுப்புமிக்க சமூகத்தையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும் ஆசிரியர்களின் உன்னத சேவையை இந்நாளில் போற்றுவோம்.
ஆசிரியர்களின் தன்னலமற்ற உழைப்பும், அன்பான வழிகாட்டுதலும், மாணவர்களின் கனவுகளுக்கு புதிய பாதைகளைத் திறந்து, அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Those who give wings dreams students Tamil Nadu Chief Minister Vijay congratulates teachers