பூத் கமிட்டியே இல்லாதவர்கள்..விஜய்யிடம் 234 தொகுதியில் வேட்பாளர்கள் இருக்காங்களா?..ராஜேந்திர பாலாஜி ஆவேசம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பூத் கமிட்டி அமைப்பே இல்லாத சிலர் அரசியலில் சித்து விளையாட்டு காட்டி வருகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான பலம் தவெகவுக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜயை அதிமுக தலைவர்கள் தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் ஏற்கனவே தாக்கி வந்த நிலையில், கடந்த வாரத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக விமர்சனத்தில் இறங்கினார். விஜய்யின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவர் விமர்சித்தாலும், செல்லூர் ராஜு வெளிப்படையாக தாக்கினார். தற்போது அந்த வரிசையில் ராஜேந்திர பாலாஜியும் இணைந்துள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி,
“2026ஆம் ஆண்டு அதிமுகவுக்கான ஆண்டு. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். தேர்தல் களம் என்பது அதிமுக மற்றும் திமுக இடையே தான். நம்முடன் வருபவர்கள் வரட்டும்; இருப்பவர்களை வைத்துக்கொண்டே வெற்றி பெறும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது” என்று கூறினார்.

மேலும்,“அதிமுகவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, நமது கூட்டணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால், அதிமுகவை எங்கேயோ கொண்டு போய் அடகு வைத்திருப்பார்கள். அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

தவெகவை நேரடியாக சாடிய ராஜேந்திர பாலாஜி,“நாங்கள்தான் புதிய வரலாறு என சொல்பவர்கள், முதலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் பலம் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை சொல்ல வேண்டும். பூத் கமிட்டி கட்டமைப்பே இல்லாத சிலர் இன்று அரசியலில் சித்து விளையாட்டு காட்டுகிறார்கள்” என்று விமர்சித்தார்.

அதோடு,“தேர்தல் களத்தில் உண்மையான போட்டி அதிமுக–திமுக இடையே தான். சினிமா ஸ்டார்கள் யார் வந்தாலும் கூட்டம் கூடும். ஆனால் அந்த கூட்டம் ஓட்டாக மாறாது. விஜய்யின் ஆசை நிராசையாக போகும். நிச்சயமாக இந்த தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும்” என ராஜேந்திர பாலாஜி கடுமையாக தாக்கினார்.

இந்த விமர்சனங்கள், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – தவெக இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடையும் என்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who donot have a booth committee does Vijay have candidates in 234 constituencies Rajendra Balaji is furious


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->