அதிரடி பதில்!!! துயரங்களை கொடுக்கிற ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி', 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது' என்று தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு தகுந்த பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது. அ.தி.மு.க. ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சியே சாட்சி.

துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.

தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியுடைய சாதனை தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது சட்ட சபையில் அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi firing Testament regime that causing tragedies CM MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->