அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு : அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்! - Seithipunal
Seithipunal



சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்களால் விபத்து ஏற்பட்டால், அந்த பகுதியை சேர்ந்த அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவார்கள் என்று, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர், கட்சி கொடி கம்பங்களால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இது குறித்த வழக்கில் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்த பின்னரும், சாலை ஓரங்களில் பேனர் வைக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், திமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் பேனர் வைத்ததாகவும், அது குறித்து போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், திமுகவினர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, தலை இல்லாத உருவ பொம்மையை சாட்டையால் அடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஒரு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்கள் கீழே விழுந்து பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்படுவார்கள்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டோடு இந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுபவர்கள் என்று, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai panar issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->