கஞ்சா விற்பனை தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அதில், கஞ்சாவை ஒழிக்க உதவுபவர்கள் என்னுடன் ‘டீ’ குடிக்கலாம். கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் அறிவிப்பில் மேலும்,

"மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள 63799-04848 என்ற எண்ணுக்கு கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

இந்த தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் வாட்ஸ்-அப் மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம், மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம்.

தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் 10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

கல்லூரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி ஸ்தாபனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் போலீஸ் சூப்பிரண்டுடன் உடன் தேநீர் அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேநீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

மேலும் அவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும். ‘இளைய சமுதாயத்தை மற்றும் வருங்கால தமிழகத்தை காக்க உதவிடுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvallur police announce for ganja sale


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->