புதுவையில் வாக்குசாவடியான திரையரங்கம்.! - Seithipunal
Seithipunal


புதுவையில் உள்ள ஒரு சினிமா திரையரங்கம் வாக்குசாவடியாக மாற்றப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகள் தயாராகி உள்ளன.

வாக்கு பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. வாக்கு பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் தண்ணீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளியூரில் இருக்கும் வாக்காளர்களுக்கு என சிறப்பு பேருந்து வசதிகள் செய்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் தேர்தலையொட்டி இன்று இரவு தொடங்கி 18-ம் தேதி முழுக்க காட்சிகள் ரத்து செய்யப்படுள்ளன.

இந்த நிலையில், புதுவையில் உள்ள ஒரு திரையரங்கம் வாக்குச்சாவடியாக மாறியுள்ளது. புதுவை மூலக்குளத்தில் வசந்தராஜா என்ற திரையரங்கம் உள்ளது. தேர்தலையொட்டி இந்த திரையரங்கம் வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த திரையரங்கத்தில், இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theater change to election polling booth


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal