தலைமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த உடன்பிறப்பு! தீக்குளிக்க போவதாக மிரட்டும் மாவட்ட செயலாளர்! - Seithipunal
Seithipunal


உட்கட்சித் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்யாத ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு!

தற்பொழுது திமுகவின் உட்கட்சி தேர்தல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளை திமுகவின் தலைமை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லதுரை இருந்து வருகிறார். இவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தென்காசி மாவட்டத்திலிருந்து அமைச்சராக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜபாளையத்தை சேர்ந்த தனுஷ்குமார் எம்பி யை மாவட்டச் செயலாளர் பதவிக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார்.

இதற்கு தென்காசி மாவட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அறிவாலயம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனுஷ்குமாரை எவ்வாறு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்ய முடியும். அவர் தென்காசி மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்யாத நிலையில் பொறுப்பு மட்டும் எவ்வாறு வழங்கப்படுகிறது. 

இதற்கிடையே தென்காசி முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த விஜய அமுதன் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக தென்காசியில் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டதால் அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதைப் பற்றி தற்போதைய தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை கூறுகையில் "நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் நான் வழக்கு தொடரவில்லை. நான் தற்பொழுது சென்னையில் உள்ளேன். இதை கேள்விப்பட்டதும் என் உயிரே போயிடுச்சு, எனக்கு எதிராக செயல்படுபவர்கள் இதனை செய்கின்றனர். நாளை வழக்கை வாபஸ் பெறுவார்கள், இல்லையென்றால் தீக்குளிப்பேன். கட்சித் தலைமை என் மீது நல்லெண்ணம் கொண்டுள்ளது. இதனை கெடுக்கவே சிலர் முயற்சி செய்துகின்றனர்" என்றார் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி தனித் தொகுதி, அந்த தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் இருந்து வருகிறார். அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவரை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளது அனைவரும் அறிந்ததே. அவரை மாவட்டச் செயலாளராக்க அமைச்சரின் சிபாரிசின் பேரில் பணிகள் நடைபெறுகிறதோ என்று உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The district secretary is responsible for a person who did not file a petition for internal party elections


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->