ஆளுநர் மாளிகையை சனாதன தர்மத்தின் கூடாரமாக மாற்றும் ஆர்.என் ரவி.!! - அமைச்சர் தங்கம் தென்னரசு..!! 
                                    
                                    
                                   Thangam thenarasu response to Governor Ravi comment on Vallalar
 
                                 
                               
                                
                                      
                                            ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து சனாதன தர்மம் தொடர்பான கருத்துக்களை பொது மேடைகளில் பேசி வருகிறார். திராவிட கொள்கை கொண்ட தமிழ் மண்ணில் சனாதனத்தை மத்தியில் ஆளும் பாஜக ஆளுநர் மூலம் திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வடலூரில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி "வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்சம்" என புகழ்ந்து பேசி இருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் "சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
 
 
                                     
                                 
                   
                       English Summary
                       Thangam thenarasu response to Governor Ravi comment on Vallalar