த.வெ.கவின் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை எப்போது? வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அறிவித்ததோடு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயத்தை அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் உறுப்பினர் சேர்க்கை குறித்தான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஆன்லைன் செயலி மூலம் தமிழக முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டு இருந்த நிலையில் அது என்று தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் வரும் மார்ச் 8 அல்லது 9 ஆகிய தேதிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணியின் செயலாளர் மகளிர் என்பதால் மகளிர் தினத்தன்று உறுப்பினர் சேர்க்கை அணி அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamizhaga Vettri Kazhagam members enrollment on Womens day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->