இது ஆட்சிக்கான கூட்டணிதான்., அரசியல் கூட்டணி இல்லை!! தம்பிதுரையின் பேச்சால் ஸ்தம்பித்த பாஜக!!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் வேடசந்தூரில் துணை சபாநாயகர் தம்பிதுரை, " தமிழகத்தின் உரிமைகளை பெற அதிமுக தொடர்ந்து மக்களவையில் குரலெழுப்பி வருகிறது. மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய மீத தொகையை கேட்டு தற்சமயம் போராடி வருகின்றோம். 

மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகத்துக்கு சாதகமாக பாஜக செயல்பட்டு வருகிறதை கண்டித்து எங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றோம். ஆட்சியில் தான் தொடர்பு உள்ளதே தவிர இது அரசியல் கூட்டணி கிடையாது. அதிமுக பாஜக இடையே கூட்டணி நிச்சயம் கிடையாது.

பிரதமரின் திட்டங்களில் சிலதை எதிர்த்தும் சிலதை ஆதரித்தும் வருகின்றோம். பாஜகவின் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிமுகவில் நான் வகிக்கும் பொறுப்பு பற்றியும், கூட்டணி பற்றி கருத்து கூற எனக்கு என்ன தகுதி உள்ளது என்றும், கூறி வந்தார்.

இதனை தொடர்ந்து திராவிட கட்சிகள் ஊழல் கட்சிகள் என்றும், முதல்வரை செயல்படாதவர் என்றும் குறை கூறி கொண்டே இருக்கிறார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான என்னால் இதனை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

இந்நிலையில், கூட்டணி குறித்து அதிமுக இதுவரை பேசவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டணி குறித்து தக்க சமயத்தில் முடிவெடுப்பனர்." என கூறியுள்ளார். 

இவ்வாறு பாஜகவை ஒதுக்கும் விதமான கருத்துக்களால் கூட்டணி குறித்து பாஜக கவலையில் இருப்பதாக தெரிகிறது. 

English Summary

thambidurai says this is not coalition


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal