தமிழகத்தின் இந்த பகுதிகளில் 2+1 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.! - Seithipunal
Seithipunal


வருகிற 9-ந் தேதி தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 12-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக, இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், "கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக இன்று (7-ந் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும். வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac leave for election july 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->