மாவட்ட ஆட்சியர்களிடம் அவசர ஆலோசனை நடத்தி உத்தரவை பிறப்பித்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


இலங்கை அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.

கனமழையின் காரணமாக ஏரி, குளம், அணைகளில் அதிக அளவுவில் தண்ணீர் வருகிறது. ஓடைகளில் காட்டாற்று போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் குளித்துறையில் 14 செ.மீ. மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 

இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில்  7 செ.மீ. மழையும், தென்காசி, வேடசந்தூர், தக்கலை உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. 

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டத்தில் உள்ள கலெக்டர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை தேவைப்பட்டால் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லுமாறு ஆட்சியர்களுக்கு   முதல்வர்  அறிவுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் பெய்து வரும் மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu cm discuss with district collecters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->