திமுக அரசை கண்டித்து பாஜக போராட்டம்.. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்த கோரி பாஜக சார்பில் சென்னையில் மாட்டு வண்டி போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருகின்றன. அதேபோல் தமிழக அரசும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதையும், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று மாட்டு வண்டி போராட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக விவசாய அணியின் தென் சென்னை மாவட்ட தலைவர், திரு. ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள், திரு. வி.பி. துரைசாமி, திரு. எம்.என். ராஜா, பொதுச் செயலாளர், திரு. கரு.நாகராஜன்,  முன்னாள் சென்னை மேயர் திரு. கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையிலும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பை நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அப்போது, மத்திய அரசின் விலைக்குறைப்பை நடைமுறைப்படுத்த கோரி, கையில் பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய வி.பி. துரைசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது என்றும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். மத்திய அரசை குறை கூறி வந்த திமுக, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தும், திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை கண்டிக்கத்தக்கது என்றார். மேலும், திமுக எப்போதுமே மத்திய அரசை குறை கூறி அதன் பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது என்றும், பெட்ரோல் விலைக் குறைப்பை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் திமுக அரசின் பொய் வாக்குறுதிகளை எடுத்துச்சொல்லி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும், மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp protest for dmk govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->