தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தேர்தல் முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் அவரது வீட்டிலிருந்து செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை, 

கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களை முன்னிறுத்தி அதிக அளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்லப்பட்டது. இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். எனக்கு வாக்களிக்காதவர்கள், வாக்களித்தவர்களுக்கும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த கால அரசியல் கொண்டு பார்க்கும் போது மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்துவிடக்கூடாது. 

இது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரச்சாரம் தான். பிரதமர் மோடி பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். மற்ற மாநில மக்கள் ஏற்றுக் கொண்டனர். 

நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப்பட்டது. நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெற என்ற ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்தோம். தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலையாக உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai say about bjp failure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->