ஆளுநர்களும் அரசியல் பேசலாம்.!! அண்ணாமலைக்கு தமிழிசை பதிலடி.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 இந்து, கிறிஸ்துவ ஜோடிகளுக்கு அவரவர் மத வழி முறைப்பட, இலவச திருமணம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை ''தண்ணீர் விட மாட்டோம் என கர்நாடகா அரசு மறுக்க முடியாது. அவ்வாறு கூற அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக நலனை, முதல்வர் மு.க ஸ்டாலின் அடமானம் வைத்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி பேசிக் கொண்டிருந்தால் அது தவறான மரபாகிவிடும். அதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். ஆளும் அரசின் குறைபாடுகளை ஆளுநர் தினமும் செய்தியாளர்களை சந்தித்து பேசினால் அது நன்றாக இருக்காது" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என அண்ணாமலை கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் "ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.  அளுநர்களும் அரசியல் பேசலாம். அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும்போது. ஆட்சி தலைவர்களும் அரசியல் பேசலாம். ஆளுநர்களுக்கும் பேச்சுரிமை உண்டு" என அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai said that Governors can also talk about politics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->