தமிழக அரசியலில் பரபரப்பு...! தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறன் குறித்து பிரதமர் மோடி கடும் தாக்கு...!
Tamil Nadu politics turmoil PM Modi attacks DMK regime administrative capacity
தமிழக பா.ஜ.க. செயல்வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனை பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது பெருமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது," தமிழகத்தில் பா.ஜ.க. செயல்வீரர்கள், தி.மு.க.வின் நிர்வாகக் குறைபாடுகளை மக்கள் முன் வெளிப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நீண்டநோக்கு திட்டங்களை விரிவாக எடுத்துரைத்து வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 13-ம் தேதி மாலை நடைபெறவுள்ள “எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கடின உழைப்புடன் பணியாற்றும் செயல்வீரர்களுடன் நேரடியாக உரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தமிழக பா.ஜ.க. பூத் கமிட்டி கூட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Tamil Nadu politics turmoil PM Modi attacks DMK regime administrative capacity