லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் தமிழக பாஜக..!! பூத் கமிட்டி அமைப்பதில் தீவிரம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் குறைந்தது 25 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதுடன் 12 உறுப்பினர்கள் இடம்பெறும் பூத் கமிட்டியை அமைக்குமாறு மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

பூத் கமிட்டி அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகிகள் முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தலில் வெற்றி பெற முதலில் பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை கமலாலயத்தில் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை "பூத் கமிட்டியை முழுமையாக அமல்படுத்தாமல் தாமதம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜனவரி மாதத்திற்குள் அந்த பணி முடிக்க வேண்டும்" என அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் பேசிய அவர் "தற்பொழுது தமிழக பாஜக மாவட்ட அளவில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் பாஜக தொண்டர்கள் பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தமிழகத்திற்கு கிடைத்த நன்மைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். தமிழக பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு தயாராகிவிட்டது. இனிவரும் காலங்களில் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் 2024 பொதுத்தேர்தலை நோக்கியே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu BJP prepares for Lok Sabha elections


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->