தேசிய அரசியலில் கால் பதிக்கும் நடிகர் "மன்சூரலி கான்".!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் வில்லன்கள் கதாபாத்திரத்தில் நடித்த முக்கிய நடிகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் நிச்சயம் நடிகர் மன்சூரலி கான் இடம் பெறுவார். வில்லன் கதாபாத்திரம் மட்டுமல்லாது, காமெடி நடிகராகவும் பல்வேறு படங்களில் கலக்கியுள்ள மன்சூரலி கான். இவர் சமீபத்தில் "தமிழ் தேசிய புலிகள்" என்ற அமைப்பை உருவாக்கி எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்து தமிழக அரசியல் களத்தை அதிரவிட்டார்.

இந்நிலையில் தனது 'தமிழ் தேசிய புலிகள் அமைப்பின் பெயரை "இந்திய ஜனநாயக புலிகள்" என பெயர் மாற்றம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சென்னை: 26.01.2024, காலை 09:00 இந்திய ஜனநாயக புலிகள்”, முன்னர் “தமிழ் தேசிய புலிகள்” என அறியப்பட்டவை, தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தில் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்த மாற்றம் ஜாதி வெறியை நீக்கி, கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது. தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நமது இயக்கத்தை விரிவுபடுத்தும் இந்த புதிய பயணத்தின் மூலம், நாம் சமூக நீதியை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வோம்" என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil Actor Mansoorali Khan who is stepping into national politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->