தமிழ் சினிமாவின் பாகுபலி சூர்யா தான்...! கார்த்தி சொன்ன சீக்ரெட்...! - வைரலாகும் வீடியோ...! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தில் நடித்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆன்மிக நம்பிக்கைகளும் அதிரடி அம்சங்களும் கலந்த திரைக்கதையாக இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு தீவிர விளம்பர பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.சமீபத்தில் வெளியான சூர்யா – திரிஷா இணைந்த புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லரும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், ‘வெரப்பா’ என்ற புதிய பாடல் இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவித்திருந்தார். அதேபோல், படத்தின் தெலுங்கு பதிப்பான வீரபத்ருடு திரைப்படத்தின் டிரெய்லரும் நேற்று வெளியிடப்பட்டது.இந்த தெலுங்கு பதிப்பின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா ஐதராபாத் நகரில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கார்த்தி, சூர்யாவை பாராட்டி உரையாற்றினார்.அவர் பேசுகையில், “இந்த படத்தில் அண்ணன் சூர்யா கத்தியும் சுருட்டும் ஏந்தி அமர்ந்திருக்கும் தோற்றத்தை முதலில் பார்த்தவுடன் எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.

இது வெறும் அதிரடி படம் மட்டும் அல்ல; குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு கலந்த திரைப்படம். அதேசமயம் நகைச்சுவையும் உணர்ச்சிகளும் நிறைந்த படமாக இருக்கும்.ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் காட்சிப்பதிவும், சாய் அபயங்கரின் இசையும் படத்திற்கு தனி உயிரூட்டியிருக்கிறது.

‘காட் மோட்’ பாடல் அரங்கையே அதிர வைத்தது. ‘பீஸ்ட் மோட்’ கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் ‘காட் மோட்’ என்பது புதுமையான அனுபவமாக இருந்தது. அதன் பிறகு வெளியான பாடல்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.அண்ணன் நடித்த சில காட்சிகளை பார்த்தேன். அவ்வளவு வலிமையும் ஆற்றலும் கொண்ட காட்சிகளை அவரால் மட்டுமே இயல்பாக செய்ய முடியும்.

உண்மையிலேயே அவர் ‘காட் மோட்’ நிலையில் இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தை சுமந்து செல்லும் காட்சி நினைவுக்கு வருகிறது. எவ்வளவு பெரிய பொறுப்போ, சுமையோ வந்தாலும் அதை தாங்கும் சக்தி அண்ணனுக்கு இருக்கிறது. சினிமாவை நேசிக்கும் அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் கொண்டாட வேண்டிய திரைப்படம் இது” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suriya Baahubali Tamil cinema Karthi secret Viral video


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->