#BREAKING || மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி ஆட்சி செய்யும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன் அடிப்படையில் 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கியது. அதில் டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court orders denial bail to manish sisodia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->