திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனையில் அனுமதி...!
Sudden health deterioration Minister M Subramanian admitted Guindy Hospital
திமுகவின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக உடல் சோர்வு மற்றும் தொடர்ந்து காய்ச்சல் தொந்தரவு செய்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி, சென்னை வளாகத்தில் சேர்த்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல்நிலை விரைவில் மேம்பட்டு வருவதாகவும், முழு நலம் பெற்றவுடன் ஓரிரு நாட்களில் அமைச்சர் வீடு திரும்புவார் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Sudden health deterioration Minister M Subramanian admitted Guindy Hospital