இது போதுமே.. திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கலாம்.. கொளுத்தி போட்ட சுப்பிரமணியசாமி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கள்ளச்சாராயம் மரணங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், குற்றவாளி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக எழுந்த சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி அடங்குவதற்குள் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் திமுக அரசு மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் ஊழல் புகார் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த ஜூன் 23ம் தேதி காலை 10 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சரவை சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை, நிர்வாக குறைபாடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக அரசை கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசை கலைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அந்த பதிவில் "அரசியலமைப்புச்சட்டத்தின் 356-வது பிரிவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படவில்லை என்றால், அதை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யலாம். கோவில்களை கைப்பற்றுவதோடு, அதன் விவகாரங்களில் தலையிட்டு, மிரட்டும் வகையில் திமுக அமைச்சர்கள் பேசுவதை வைத்தே திமுக அரசை கலைக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramaniasamy said DMK govt can be dismiss in temple capturing process


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->