திமுக எம்.எல்.ஏ-வை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கிய ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


திமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரை சந்தித்தார். இதனால் அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு ஏழு நாட்களில் விளக்கம் அளிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விளக்கமளித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி கு.க.செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச்‌ செயலாளர்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயற்குழு உறுப்பினர்‌ பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம்‌ கழகக்‌ கட்டுப்பாட்டை மீறியும்‌, திமுகற்கு அவப்பெயர்‌ ஏற்படும்‌ வகையிலும்‌ செயல்பட்டு வந்ததால்‌, அவரிடம்‌ கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில்‌ ஏற்றுக்‌ கொள்ளும்படி இல்லாத காரணத்தால்‌, அவர்‌ அடிப்படை உறுப்பினர்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பொறுப்பிலிருந்தும்‌ நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin announce kuka selvam dimiss from dmk


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal