போதைப்பொருள் விஷயத்தில் கிடுக்குப்பிடி போகும் முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. அதில், பேசிய தமிழக முதல்வர், ஸ்டாலின், "போதைப் பொருள் தடுப்பில், அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கல்வி நிறுவனங்களில் இருக்கின்ற விடுதிகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும். 

போதை பொருள் கடத்தல் செயல்படுபவர் களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்காக டிஎஸ்பி நியமிக்கப்படுவார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணிகள், வாகனங்கள் மற்றும் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும்.

மதுவிலக்கில் ஒன்றிய நுண்ணறிவு பிரிவு பலப்படுத்தப்படுகின்றது. போதை பாதையில் சென்றால் அழிவு நிச்சயம். எனவே, அந்த பாதையில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் அதில் செல்ல விடாதீர்கள். போதையின் பாதையில் எவரையுமே அனுமதிக்காதீர்கள்."என வலியுறுத்துங்கள். 

பள்ளி மற்றும் கல்லூரிகளின் முன்பாக போதைப்பொருள் விற்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை இனி உறுதி செய்யப்படும். போலிசார் போதைப்பொருளை ஒழிக்க உறுதியேற்க வேண்டும், அத்துடன் சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin about smuggling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->