எல்லாத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டார் ராஜபக்சே - இலங்கையன்ஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தற்போது பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு பெருமளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது 1000 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பேரிக்காய் தற்போது 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் இதனை வாங்க மறுக்கின்றனர்.

சீனாவிடம் ராஜபக்சே அனைத்தையும் விற்பனை செய்து விட்டார் என்று வியாபாரிகள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 

விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், "இலங்கை அரசாங்கம் எல்லாவற்றையும் சீனாவிற்கு விற்பனை செய்து விட்டது. இதனால் இலங்கை அரசிடம் தற்போது பணம் இல்லாத காரணத்தினால் வேறு நாடுகளிலிருந்து  கடன் வாங்குகிறது. மேலும்,  விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது". என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan price hike issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->