நீங்க ஆசைப்பட்டிங்களே., அதை பாக்காமலே போய்ட்டிங்களே எஸ்.பி.பி., சார்! வைரல் ஆகும் புகைப்படங்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதமே மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ள செய்தி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை ராமமூர்த்தி - தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு ஆடர் கொடுத்துள்ளார்.

மேலும் தனது சிலை ஒன்றையும் செய்து கொடுக்கும்படி எஸ்பிபி சிற்பி ராஜ்குமார் உடையார் இடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சிலை செய்ய தனது புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் ராஜ்குமார் உடையாருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி எஸ் பி பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். இந்த மரண செய்தி அறிந்த சிற்பி ராஜ்குமார் உடையார் தெரிவிக்கையில், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் சிலைகளை அவருக்கு காட்ட வேண்டும் என இருந்தேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது" என்று வருத்தம் தெரிவித்தார்.

எஸ் பி பாலசுப்ரமணியம் தாயார் மற்றும் தகப்பனாரின் சிலைகள் மற்றும் எஸ்பி பாலசுப்ரமணியன் சிலைகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தன் மரணத்தை முன்பே அறிந்துகொள்ளும் சக்தி எஸ்பிபி.,க்கு இருந்ததா என்று சமூக வாசிகள் அவரின் ரசிகர்கள் எழுதி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spb statue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->