திகார் சிறையில் சோனியா காந்தி? பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


பணப்பரிமாற்றத்தில் முறைகேடு செய்ததாக கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள்  சிவகுமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார் சிறை சென்று இன்று நேரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது. 

பின்னர் சோனியா காந்தி, சிறையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் அனைத்தும் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்தை ஏற்கனவே ஒருமுறை திகார் சிறை சென்று சந்தித்த சோனியா காந்தி இரண்டாவது முறையாக தற்போது திகார் சிறைக்கு செல்வது கட்சிக்கும் அரசுக்கும் மறைமுகமாக விடுக்கும் செய்தியாக கருதப்படுகிறது.

பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றவுடன் ப.சிதம்பரம், டி,கே.சிவகுமார் , பிரபுல் பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள்  மீது வழக்குகள் பதிவு செய்து  மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடடுதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, திகார் சிறையில் உள்ள டி.கே.சிவகுமாரை சந்திக்க திகார் சிறை அதிகாரிகளிடம் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soniya gandhi meet with sivakumar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->