தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான தொகுதிகள் எவை? 5 ஆண்டுகளுக் பின் களமிறங்கிய சோனியா!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் இம்மாநாட்டில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூவ முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டி கூட்டணியின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். 

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 ஆண்டுகளுக்குப் இன்றிரவு 10:40 மணிக்கு தமிழகம் வரும் சோனியா காந்தியை விமான நிலையம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் சோனியா காந்தி தமிழ்நாட்டகன் அரசியல் சூழல், தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi is consultation with TN Congress Committee leaders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->