கொத்தடிமை கூட்டம் உங்களுக்கு எண்ட் கார்டு வைக்கும்...! - ஸ்டாலினுக்கு எதிராக தவெக காட்டம்...!
slave crowd put end you Show your anger against Stalin
தமிழக அரசியல் களத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், தவெக ஐடி பிரிவு தனது சமூக வலைதள பதிவின் மூலம் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளது.
அந்த பதிவில், மக்கள் அளித்த ஆதரவின் மூலம் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததாகவும், ஜனநாயக மதிப்புகளை முன்னிறுத்தும் அரசியல் சக்திகளின் ஒத்துழைப்பால் தற்போதைய ஆட்சி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் அதிகாரப் பகிர்விலும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரசியல் இயக்கங்கள் அதிகாரத்தை குடும்ப வட்டத்திற்குள் மட்டுமே சுருக்கிக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள தவெக, தாங்கள் அதுபோன்ற அணுகுமுறையை பின்பற்றவில்லை என்றும், கூட்டணி தரப்பினருடன் அதிகாரப் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் அரசியல் பலன்களை மட்டும் அனுபவித்துவிட்டு பின்னர் அவர்களையே விமர்சிப்பது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக சாடியுள்ள அந்த பதிவு, அரசியல் யதார்த்தங்களை உணராமல் சுற்றியுள்ளவர்களின் தகவல்களையே நம்பி செயல்படுவது எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
அத்துடன், சமீப கால அரசியல் பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் மேலும் பல அரசியல் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும், கட்சிக்குள் உள்ளவர்களே எதிர்காலத்தில் சவாலாக மாறக்கூடும் என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக ஐடி பிரிவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களிலும் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.
English Summary
slave crowd put end you Show your anger against Stalin