SIR சூழல் சூடுபிடிப்பு...! பாராளுமன்றம் அமளியில் உறைந்து, இரு அவைகளும் ஒத்திவைப்பு...!
SIR Environment heating up Parliament chaos both houses adjourned
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 1) அதிரடி அரசியல் சூழலில் துவங்கியது. தொடக்க நாளிலேயே SIR (சிறப்பு வாக்காளர் திருத்தம்) விவகாரத்தை விவாதிக்க வேண்டும் எனக் கோரிய எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் இறங்கியதால், மக்களவை முழு நாளும் செயல்பாடின்றி ஒத்திவைக்கப்பட்டு பிய்த்தது.

இன்று காலை கூட்டங்கள் துவங்குவதற்கு முன்பே, பாராளுமன்ற வளாகம் போராட்ட களமாக மாறியது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், SIR பணிகளை கண்டித்தும், ஜனநாயக உரிமை மீறல் என குற்றஞ்சாட்டியும் கருப்பு பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்து, குளிர்கால கூட்டத்தொடரின் 2ஆம் நாள் நிறைந்த பதற்றத்துடன் தொடங்கியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அவசியமான விவாதத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, ஆளும் தரப்பினரும் எம்.பி.க்களும் பேசத் தொடங்கிய போதெல்லாம் கூச்சல்கள், கோஷங்கள் எழுந்தன.
இதனால் சபாநாயகர் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனார்.தொடர் அமளி காரணமாக முதலில் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மதியம் மீண்டும் கூட்டம் சேரும் பொழுதும் அதே கோஷக்கரங்கள், அதே எதிர்ப்புகள்.
இதனால் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே மீண்டும் செயலிழந்து மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
English Summary
SIR Environment heating up Parliament chaos both houses adjourned