செந்தில் பாலாஜியின் சிறைக் காவல் 22வது முறை நீட்டிக்கப்படுமா? இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 21வது முறையாக நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. 

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விசாரணைக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறை கைது செய்த பிறகு தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்யாததால் செந்தில் பாலாஜி இலக்காக இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீதிப்பதால் அவருடைய ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றத்தில் வலியுறுத்தி வந்தது இந்த சூழலில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதுவேலையில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மன சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. 

அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji judicial custody ended today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->