SenthilBalaji Case || சிக்கிய 900 பேர்.!! விசாரனை எப்போது.? நீதிமன்ற அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பழையிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னையில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அதனை ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அத்தோடு வழக்கை கடந்த ஆண்டு நம்பர் 30 ஆம் தேதிக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து மீண்டும் விசாரணை தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் அரசு ஊழியர்கள் போக்குவரத்து துறை ஊழியர்கள் என 900 பேர் வரை குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்னும் சிலரை விசாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தலைமையிலான அமர்வின் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று விசாரணை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மதிய குற்ற பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. என்னிடத்தில் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case hearing postponed on April4


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->