செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு.!! வெளியான இறுதி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கை செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை திணிப்பதாகவும், அவருக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார். 

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji bail case judgement postponed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->