மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் செந்தில் பாலாஜி.!! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த வழக்கு விசாரணையின் போது 3 மாதங்களுக்குள் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் காவலை நீட்டிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.

அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை‌ உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என வாதிட்டார். 

அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்தது. இதன் மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் உச்சநீதிமன்ற படியை‌ ஏற்றுள்ளார். ஏற்கனவே அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது‌ என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji again appeal in SupremeCourt against madrashc verdict


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->