மைசூர் : பிரச்சாரத்தில் பிரதமர் மீது செல்போன் வீச்சு.!! தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


மைசூர் : பிரச்சாரத்தில் பிரதமர் மீது செல்போன் வீச்சு.!! தீவிர விசாரணையில் போலீசார்.!!

வருகிற 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மைசூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அங்கு அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் மக்களுக்கு கை அசைத்த படிச் சென்றார். வழிநெடுவிலும் பாஜகவினர் மலர் தூவியும், கொடிகளை அசைத்தும் வரவேற்றனர்.

அப்போது திடீரென மர்நபர் ஒருவர், பிரதமர் மோடியை நோக்கி செல்போனை வீசினார். அந்த செல்போன் பறந்து வந்து மோடி சென்ற வாகனத்தின் மீது விழுந்தது. இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அந்த செல்போனை பிரதமருடன் வந்த சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த மர்நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
 

இந்தச் சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்ததாவது :- "பிரதமர் வந்த வாகனத்தின் மீது செல்போனை வீசியவர் பாஜகவைச் சேர்ந்தவர். தற்போது அவர் எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளார். அவர் எந்த தவறான எண்ணத்துடன் செல்போனை வீசவில்லை" என்றுத் தெரிவித்தார்.

இதற்கிடையே செல்போனை வீசிய நபரை எஸ்பிஜி குழுவினர் சோதனையிட்ட பின் அவரிடம் செல்போன் ஒப்படைத்துள்ளனர். அந்த நபரிடம் இன்று கர்நாடகா போலீசார் வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selpone threw on pm modi in mysore election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->