'சுயநல அரசியல்'...பாஜக மீது காங்கிரஸ் கடும் கண்டனம்...பதிலடி கொடுக்கத் தயார்...! - தமிழிசை முழக்கம் - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டதாவது,"முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று தமிழக சட்டமன்றத்தில் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் சூழல் மீண்டும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், “பாஜக மறைமுகமாக ஆட்சியை கைப்பற்ற முயன்றது”, “கவர்னர் ஆட்சியை உருவாக்க திட்டமிட்டது” போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது முற்றிலும் ஆதாரமற்ற அரசியல் நாடகமாகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேறு எந்த அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக ஆதரவை அறிவித்து, அதுவரை நீடித்த கூட்டணியை உடனடியாக கைவிட்டவர்கள் தற்போது பாஜக மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது அரசியல் முரண்பாட்டின் உச்சக்கட்டம் எனவும் அவர் சாடியுள்ளார்.

சுயநல அரசியல் லாபத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுகளை மறைப்பதற்காக, இல்லாத குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு உருவாக்கி, அதனை பாஜக மீது சுமத்த முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசிவரும் பலரும் ஒரே குரலில் பாஜக குறித்து கருத்து தெரிவிப்பது, அந்தக் கட்சியின் வளர்ச்சியையும் மக்கள் ஆதரவையும் கண்டு அவர்கள் உள்ளுக்குள் அச்சமடைந்திருப்பதற்கான வெளிப்பாடாகவே பார்க்கப்படுவதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

மத அடிப்படையிலான அணுகுமுறைகளை ஆதரித்துக்கொண்டே, தங்களை மதச்சார்பற்றவர்களாக சித்தரிக்க முயற்சிப்பது இரட்டை வேட அரசியலின் வெளிப்படையான முகமெனவும் அவர் விமர்சித்துள்ளார். இதையெல்லாம் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றம் என்பது ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் குறித்து பேச வேண்டிய இடமாக இருக்க வேண்டியது. ஆனால் தற்போது அங்கு வேறுபாடு, பிளவு மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள் விதைக்கப்படுகின்றன என்பது வேதனையளிப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

“மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்தார்கள்; பழைய அரசியல் தவறுகளுக்கு பாதுகாப்பு அரணாக அமைய வேண்டுமென்று அல்ல” என்றும், வருங்கால தமிழகம் இதற்கான தக்க பதிலை வழங்கும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மற்ற உறுப்பினர்களும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஜனநாயக விவாதத்தின் தரத்தை குறைப்பதாகவும், அது கண்டிக்கத்தக்க அரசியல் போக்காகும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selfish politics Congress strongly condemns BJP Ready retaliate Tamilisai slogan


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->