எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம்., முன்னெடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு சீமான் கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தினை தமிழ்நாடு அரசு முன் நகர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும், ஜனவரி 6-ஆம் தேதி, எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தினை தமிழ்நாடு அரசு முன் நகர்த்துவது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கூட்டம் கூடுவதற்குப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வரும் வேளையிலேயே இக்கருத்துக்கேட்பு கூட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டுமென்பதன் அடிப்படை நோக்கமென்ன? இச்சூழ்நிலையில் மக்களின் பங்கேற்பும் கேள்விக்குறியான ஒன்றாகத்தான் அமையும். 

 

இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016 விதிப்படி கருத்துக்கேட்பின் நோக்கமும் முறியடிக்கப்படும். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதோடு, அபாயகர திட்டத்தினைக் கைவிடக்கோரியும் தமிழக முதல்வர் ஸ்டாலினை சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about New thermal power plant at Ennore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->