பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 193ல் "தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி பணியில் வகுப்பு-1ஐ சார்ந்த இயக்குனர் மற்றும் அதனை எத்த பணியிடங்களில் பணிபுரிந்த அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது. 

அதன்படி தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குநர் முனைவர் நாகராஜ முருகன் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் பழனிசாமி தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School edu dept heligher officials transferred


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->