நிஜமான 'சர்க்கார்' ஆரம்பம்...! நாளை முதலமைச்சராகப் பதவியேற்கிறாரா விஜய்...? - எதிர்பார்ப்பில் தமிழகம்!
real government beginning Will Vijay take oath Chief Minister tomorrow Tamil Nadu anticipation
நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் கணிசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் நகர்வுகளில் த.வெ.க. தரப்பு தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆட்சியை அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னருக்கு த.வெ.க. தலைவர் விஜய் இமெயில் மூலம் மனு அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கவர்னர் சில கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்க அறிவுறுத்திய நிலையில், அவற்றுக்கும் விரைவாக பதில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து, விஜய் முதலமைச்சராக எப்போது பதவியேற்பார் என்ற ஆவல் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் அதிகரித்து வருகிறது.
நேற்று முதல், அவர் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவிற்கான மேடை அமைப்புப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
real government beginning Will Vijay take oath Chief Minister tomorrow Tamil Nadu anticipation