தமிழகத்திலும் #GoBackStalin விரையில் ட்ரெண்ட் ஆகும்.!! - ஆர்.பி உதயகுமார், அதிமுக..!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பிகார் செல்லும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிகாரில் உள்ள சமூக வளைதளவாசிகள் #GoBackStalin என ட்ரெண்டிங் செய்கின்றனர். பிகாரில்  #GoBackStalin என ட்ரெண்டிங் ஆனது போல மிக விரைவிலே தமிழகத்திலும் ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை.

திமுக அரசின் இன்றைய குளறுபடியால் நிர்வாகம் முடங்கியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது திமுக கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள வைகோ ஆளுநரை பதவி நீக்க செய்ய கையெழுத்து வாங்கி வருகிறார். நல்லகண்ணு, திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஆனால் அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்க வைகோ சென்றபொழுது ஏதேதோ காரணம் சொல்லி கையெழுத்திட மறுத்து விட்டார். கூட்டணி கட்சிகளிடம் பேசி எந்த முடிவும் எடுக்காததால் திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் தேசியத் தலைவர்கள் ஸ்டாலின் அழைத்தும் வருவதில்லை.

திமுக கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம், திமுக அரசின் நிர்வாக குளறுபடி, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என நிலைமை இப்படி இருக்க தன்னையும், தனது தந்தையும், மகனையும் முன்னிலைப்படுத்துவதிலே ஸ்டாலின் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்

இதனால் அவருக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுடைய வளர்ச்சிக்கு அவர் எப்போது கவனம் செலுத்தப் போகிறார் என்பதுதான் தமிழக மக்களின் மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது'' என ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RB udhayakumar said GoBackStalin will be trending in TN too


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->