பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு!!! 5 நாட்களுக்குப் பிறகு காஷ்மீருக்கு சென்ற ராஜ்நாத் சிங்...!
Rajnath Singh visits Kashmir after 5 days to inspect affected areas
இந்திய ராணுவம், காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலை நடத்தி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அறவே அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் , பாகிஸ்தானின் பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல்களை அதிரடியாக முறியடித்தது.இதில்,ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலுக்கு பின்னர், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய மந்திரிசபை நேற்று கூடியது.
இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த ஆலோசனையில், தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் தயார்நிலை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானம் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ''ராஜ்நாத் சிங்'' புறப்பட்டு சென்றார்.இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 5 நாட்களுக்கு பின் ''ராஜ்நாத் சிங்'' காஷ்மீர் சென்றார்.
பாகிஸ்தான் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட எல்லையோர மாவட்டங்களை அவர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Rajnath Singh visits Kashmir after 5 days to inspect affected areas