பாகிஸ்தானின் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்கும் ராகுல் காந்தி!
RahulGandhi pakisthan child kashmir
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க உள்ளார்.
மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது. இதில் பல பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா அறிவித்துள்ளார். இந்தப் பிள்ளைகள் எதிர்காலத்தில் கல்வியறிவுடன் வளர வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான கல்விக்கட்டண உதவித் தொகையின் முதல் கட்ட நிதி ஆகஸ்ட் 30 அன்று வழங்கப்படவுள்ளது.
இவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை தேவையான கல்விச் செலவுகளை ராகுல் காந்தி முழுமையாக ஏற்க உள்ளார். மே மாதத்திலேயே பூஞ்ச் மாவட்டத்துக்குச் சென்ற ராகுல், தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
அப்போது, பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பட்டியலைத் தயாரிக்க கட்சியினரிடம் அவர் கேட்டிருந்தார். தற்போது அந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
English Summary
RahulGandhi pakisthan child kashmir