இந்துக்களை இழிவு படுத்திய ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal



மக்களவை எதிர்க்  கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புகள் குறித்து ஆவேசமாக பேசினார். 

பாஜகவினர் மட்டுமே இந்துக்கள் அல்ல. அவர்கள் தங்களை மட்டுமே இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொண்டு இந்துக்கள் மீதே வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றனர் என்ற ரீதியில் பேசினார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராகுல் காந்தி இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று கூறி ஒட்டுமொத்த இந்துக்களை இழிவு படுத்தி விட்டார் என்று குற்றம் சாட்டியது, இதையடுத்து ராகுல் பேசியதில் இருந்து பெரும்பாலான குறிப்புகளை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கி விட்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள், வெறுப்பை பரப்புகிறார்கள் என்று ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்து மதத்தையே இழிவு படுத்தியுள்ளார். உலகில் சனாதன இந்து தர்மத்தைப் போல் வேறு எந்த மதமும் இல்லை. எனவே இந்துக்களை இழிவாகப் பேசிய ராகுல் காந்தி இந்துக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi Will Ask Apology in Public For Humiliated Hindus Says Hindu Munnani Leader


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->