பதவி பறிப்புக்கு பின், ராகுல் காந்தி.. வயநாட்டுக்கு பயணம்.. இது தான் திட்டம்.! - Seithipunal
Seithipunal


இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவருமான ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்குப்பின் நாளை தனது தொகுதியான வயநாடு செல்ல இருக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியிலும் கலந்து கொள்கிறார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது வயநாடு தொகுதியில்  போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் நரேந்திர மோடியை  அவதூறாக பேசியதாக கூறி சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட தண்டனை சிறை தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களவை செயலகம் அவரது எம்பி பதவியை பறித்தது.

மேலும் ராகுல் காந்தி அரச பங்களாவை காலி செய்யவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் ராகுலுக்கு எதிரான கொடுக்கப்பட்ட தண்டனைக்கு  மேல்முறையீடு செய்ய அவருக்கு கால அவகாசம் அளித்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி  முடிவெடுத்த நிலையில் மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு  நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அவரது எம்.பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் பேரவை கூட்டங்களும் முடங்கின. இந்நிலையில் தனது பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ஏப்ரல் பதினொன்றாம் தேதி வயநாடு  தொகுதியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi to attend public meeting and rally in Wayanad Constituency First visit to his former constituency after being sacked as MP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->