ராகுல்காந்திக்கு மொழிபெயர்ப்பு செய்தவரால் ஈரோட்டில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 3 நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்துவரும் ராகுல் காந்தி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசலூர் ஓடாநிலை கிராமத்தில் நெசவாளர்களிடையே உரையாற்ற ராகுல் காந்தி, " இந்தியாவினுடைய விவசாயிகளையும், நெசவாளர்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் இந்திய நாட்டின் பெருமையாக பார்க்கிறேன். 

இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்றால், உங்களைப் போன்று உங்களுடைய கைகளால் செய்யப்பட்ட பொருட்களை உருவாக்கி, அதனை இந்த உலகிற்கு தரக்கூடிய நபர்களால் தான் மீண்டும் உலகம் கட்டமைக்கப்படும். 

ஒரு நாடாக, ஒரு அரசாக பார்க்கும்பொழுது இந்தியா உங்களை போன்ற விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் கைகளில் இருக்கிறது. இந்தியாவிற்காக நெசவாளர்கள் ஆகிய நீங்கள் அதிகளவு பாடுபட்டுள்ளீர்கள். உங்களின் கருத்துக்களும் நான் கேட்க ஆவலோடு காத்துகொண்டு உள்ளேன் " என்று தெரிவித்தார்.

நெசவாளர்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய ராகுல்காந்திக்கு, தமிழில் பெயர்த்த மொழி பெயர்ப்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAHUL election campaign in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal