களநிலவரேமே வேறங்க... அடித்து கூறும் ஆர்பி.உதயகுமார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் (H1N1) தீவிரமாக பரவிவரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்து மாத்திரைகள் இல்லை என்று, எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "தமிழகத்தில் தற்போதைய சீதோசன நிலையில் காற்றின் மூலம் ஸ்வைன் ஃப்ளூ, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. 

ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரது சளி துகள்கள் காற்றில் கலந்து விடும். பின்னர், அந்த காற்றை சுவாசிக்கும் அருகில் உள்ளவர்கள் எளிதாக அந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகின்றனர். 

பொதுவாக இந்த காய்ச்சல் 5 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர்களையே கடுமையாக பாதிக்கிறது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் பெரும் ஏற்படுத்தி, மூச்சுத் திணறல் வரை கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே புதுவையில் பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் காலாண்டு தேர்வை காரணம் காட்டி காய்ச்சல் இருந்தாலும் பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதை ஒரு கொடுமை என்னவென்றால், அரசு மருத்துவமனைகளில் தற்போது மருந்துகள் இருப்பு இல்லை என்பதே களநிலவரம். ஆனால், பற்றாக்குறை இல்லையென்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார். எனவே, மக்களின் உயிரைக் காக்க அரசு முன் வரவேண்டும்'' என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R P Udhayakumar say about H1N1 flu issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->