பாகிஸ்தானில் இருந்து வெடிமருந்து, துப்பாக்கி, ட்ரோன் கடத்தும் காங்கிரஸ் மாநில தலைவர்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து கோஸ்டி மோதல்கள் நடந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு கோஸ்டி மோதல்கள் ஏற்பட்டு, வெற்றி வாய்ப்புகளை இழந்து வருகிறது.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருக்கும், மாநில முதலமைச்சரும் இடையே போர் மூண்டது. இதன் காரணமாக பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

"ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எனது எனது பிள்ளைகள் போன்றவர்கள். அவர்களுக்கு அனுபவம் இல்லை. அவர்களின் ஆலோசகர்கள் அவர்களை தவறான ஒரு பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது இப்படி நடந்து இருக்க கூடாது. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன்.

நான் எனது பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று சோனியா காந்தியிடம் மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டேன். ஆனால், அவர்தான் என்னை முதல்வராக தொடர்ந்து நீங்கள் செயல்படுங்கள் என்று தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க விடாமல் இருப்பதற்கு நான் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு எதிராக ஒரு பலமான ஒரு வேட்பாளரை நிறுத்தி காட்டுவேன்.

பஞ்சாப் மாநிலத்தில் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டால் இரண்டு இலக்கங்களில் கூட வெற்றி பெற முடியாது. நவ்ஜோத் சிங் சித்து தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தானவர். அவருக்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

வெடிமருந்துகள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பஞ்சாப் மாநிலத்துக்குள் வந்துகொண்டிருக்கிறது. இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது. எல்லாம் பாகிஸ்தானில் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி பஜ்வா ஆகியோருக்கு நவ்ஜோத் சிங் சித்து நெருக்கமானவர். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமானது." என்று முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjab ex cm press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->