தமிழக சட்டமன்ற தேர்தல்; சூடுபிடிக்கும் தேர்தல் களம்; நாளை பிரதமர் மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ..!
Prime Minister Modi to hold a roadshow in Nagercoil tomorrow
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தலில் பிரசாரம் முடிய 07 நாட்களே உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நாளை நாகர்கோவிலில் 1 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும் கலந்துக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். ராகுல்காந்தி, அதேநேரம், பிரியங்கா ஆகியோரது வருகை குறித்து 02 நாளில் முடிவு எடுக்கப்படவுள்ள நிலையில், . இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் 06 மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். அதேப்போன்று, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (15-ஆம் தேதி) மாலை தமிழகம் வருகிறார். முதற்கட்டமாக அவர், குமரி மாவட்டத்தில் உள்ள 06 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக நாளை மாலை 03 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இருக்கும் ஹெலிபேடில் வந்திறங்கவுள்ளார்.
பின்னர் அங்கிருந்து காரில் பீச் ரோடு சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலை சந்திப்பு வந்தடைகிறார். அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு வரை சுமார் 01 கி.மீ. தூரம் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இவருடன், எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுகிறார். இருவரும் இணைந்து வாக்கு சேகரிக்கவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகள், நாகர்கோவிலில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். நாளை மாலை 04 மணிக்கும் தொடங்கும் ரோடு ஷோ சுமார் 01 மணி நேரம் நடைபெறும் என கூறப்படுகிறது.
பிரதமரின் இந்த ரோடு ஷோ நடக்கும் சாலையின் இருபுறத்திலும் தொண்டர்கள் நிற்க வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இன்றும் போலீசார் மோப்ப நாய் சோதனை நடத்தினர். நாளை மாலை இந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட உள்ளன.
பிரதமர் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வந்துள்ளனர். பிரதமர் வருகையையொட்டி நாகர்கோவிலில் நகரில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவுள்ளது. மதியம் 12 மணி முதல் இரவு 07 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். எனவே வெளியூர் செல்பவர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
Prime Minister Modi to hold a roadshow in Nagercoil tomorrow