என் உண்மையான பெயர் திரௌபதி இல்லை - பதவியேற்பு உரையில் அதிரவைத்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்ட திரெளபதி முர்மு அவர்கள், பதவியேற்பு உரையில் 'என் உண்மையான பெயர் திரௌபதி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு தலைவர்களுக்கான தேர்தலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பாராளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா் திரௌபதி முா்மு, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

திரௌபதி முா்மு  'ஜுஹார்' என்று ஒடியா மொழியில் 'வணக்கம்' கூறி  தனது உரையைத் தொடங்கினார். இது ஒடிசா மாநில மக்களை உச்சிகுளிர வைத்துள்ளது. 

தொடர்ந்து பேசிய அவர், என் உண்மையான பெயர் திரௌபதி அல்ல, என் பள்ளி ஆசிரியர்தான் இந்தப் பெயரை எனக்கு சூட்டினார். நான் பிறந்தபோது எங்கள் 'சந்தாலி' கலாச்சாரப்படி எனக்கு சூட்டப்பட்ட பெயர் 'புதி' என்று, திரௌபதி முா்மு தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதலமைச்சர்கள், முப்படை தலைமை தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President of India Draupadi Murmu birth name


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->