ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா பேச்சு சர்ச்சை!ஒரே பேச்சில் சோலியை முடித்த அண்ணியார்! கடும் அப்செட்டில் அறிவாலயம்! - Seithipunal
Seithipunal


சேலத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய கருத்துகள் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் கூறிய சில விமர்சனங்கள், கூட்டணிக்குள் சலசலப்பை கிளப்பியுள்ளன.

கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முதலில் ஸ்டாலின் தலைமையிலான அரசின் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய பிரேமலதா, பின்னர் திடீரென “தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது” என்று கூறியதும் மேடையில் இருந்தவர்களையே அதிர்ச்சியடைய வைத்தது. கூட்டணியில் உள்ள தலைவராக இருந்தபோதும், இவ்வாறு வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைத்தது திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

அதேநேரத்தில், தனது உரையின் இறுதியில் அந்த பிரச்சினைகளை சரிசெய்யும் திறன் முதல்வருக்கு இருப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பிரேமலதா கூறியிருந்தாலும், ஆரம்பத்தில் வெளியிட்ட கருத்துகளே அதிகமாக கவனம் பெற்றுள்ளன.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, “கூட்டணியில் இருந்தும் எதிர்க்கட்சியின் குரல்” என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுக ஆதரவாளர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கட்சி தலைமையும் இதை கவனத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், திமுக குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பிரேமலதாவை நேரில் சந்தித்து, அவரது பேச்சு குறித்து விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த சிறிய அதிர்வு பெரிதாக மாறுமா அல்லது சமரசமாக முடிவடையுமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Premalatha speech in front of Stalin creates controversy Sister in law ends Soli life with a single speech Arivalayam in deep upset


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->